சிக்கியது… சிக்கியது… ரூ. 7 கோடி சிக்கியதால் பரபரப்பு

ஐதராபாத்:
சிக்கியது… சிக்கியது… ரூ. 7 கோடி சிக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் தேர்தல் ஆணைய பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக ரூ. 7 கோடி பணம் சிக்கியது.
தெலுங்கானா மாநில சட்டசபைக்கு வரும் டிசம்பர் 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

இத்தேர்தலில் ஓட்டுக்காக பணம் கொடுக்கும் நபர்களை பிடிக்க தேர்தல் கமிஷன் சார்பில் பறக்கும் படையினரும், போலீசாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு ஐதராபாத் நகரில் சைஃபாபாத் என்ற பகுதியில் போலீசார் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கோடிக்கணக்கில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.7.51 கோடி பணம் கட்டுக்கட்டாக சிக்கியது. பணத்தை பறிமுதல் செய்த போலீசார், 4 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பக்கத்து மாநிலமான மஹாராஷ்டிராவில் இருந்து இந்த பணம் கார் மூலம் கடத்தி வரப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!