சிங்கம்புணரியில் மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை:
கோவில் திருவிழாவை ஒட்டி மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டிப் பந்தயத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

காளாப்பூர் தேவர்சோலை கொக்கன் கருப்பன்சாமி கோவில் ஆடிக்களறியை முன்னிட்டு இந்த பந்தயம் நடைபெற்றது. சிவகங்கை, மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 16 மாட்டு வண்டிகள் இந்தப் பந்தயத்தில் பங்கேற்றன.

சாலையின் இருபுறங்களிலும் நின்று பார்வையாளர்கள் உற்சாகக் குரலெழுப்பி பந்தயத்தை ரசித்தனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்பட்டன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!