சிசேரியனுக்கு முன்பு கர்ப்பிணி பெண் டான்ஸ் ஆடும் வீடியோ

சிசேரியனுக்கு முன்பு கர்ப்பிணி பெண்ணும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரும் டான்ஸ் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் லூதியான நாட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது. மருத்துவ மனையில் குழந்தை பிறப்புக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்ணும், அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவரும் இணைந்து குத்தாட்டம் போடுகின்றனர். சிசேகரியன் அறுவை சிகிச்சைக்கு சில நிமிடங்கள் முன்பு இந்த ஆட்டம் அரங்கேறி உள்ளது.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது….

ஏற்கனவே இதுபோல அமெரிக்காவின் அட்லாண்டாவைச் சேர்ந்த தோல் நோய் மற்றும் முக அழகு சிறப்பு சிகிச்சை நிபுணரான பெண் மருத்துவர் விண்டெல் பூட்டே, தனது மருத்துவ மனையில் உள்ள ஆபரேசன் தியேட்டருக்குள் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது, இடையிடையே மியூசிக் போட்டு ஆடிப்பாடி மகிழ்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோவும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் தற்போது லூதியான மருத்துவமனையில் கர்ப்பிணியும் மருத்துவரும் போடும் ஆட்டம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

ஒருவேளை அறுவை சிகிச்சை முன்பு, பேஷன்ட் நல்ல மனநிலையில் இருப்பதற்காக டாக்டர் அவருடன் இணைந்துர இந்த குத்தாட்டம் ஆடியிருக்கலாம்.

Sharing is caring!