சித்திர வல்லப பெருமாள் கோயிலில் திருடப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

வாடிப்பட்டி:
தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 4 ஐம்பொன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை சித்திர வல்லப பெருமாள் கோயிலில் 4 ஐம்பொன்சிலைகள் திருடு போயின.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இ்ந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி அருகே தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த 4 ஐம்பொன்சிலைகளை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக சமயநல்லூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!