சின்ன வெங்காயம் அறுவடை மும்முரம்… விலை குறைவு

திண்டுக்கல்:
சின்ன வெங்காயம் அறுவடை மும்முரம் அடைந்தாலும் விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை மும்முரமடைந்துள்ளது. விலை குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஒட்டன்சத்திரத்தைச் சுற்றி உள்ள மூலச்சத்திரம், கேதையுறும்பு, அம்பிளிக்கை, காவேரியம்மாபட்டி உட்பட பகுதிகளில் தற்போது வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. ஒரே சமயத்தில் இப்பணி நடந்து வருவதால் கூலி ஆட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு உள்ளது. இதனால் விவசாய தொழிலாளர்களுக்கு அதிக கூலி தர வேண்டி உள்ளது.

அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாளுக்கு நாள் விலை குறைந்து கொண்டு வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்ன வெங்காயம் கிலோ ரூ.65 க்கு விற்பனையானது. தற்போது ஒரு கிலோ ரூ.30 முதல் 40 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!