சிபிஐக்குள் நடக்குது அதிகார மோதல்… காங்., தலைவர் காட்டம்

புதுடில்லி:
சிபிஐக்குள் அதிகார மோதல் நடக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் விளாசி உள்ளார்.

சி.பி.ஐ. அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள மோதல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளதாவது:
குஜராத்தில், 2002ல், நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த வன்முறைகள் குறித்த சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக இருந்தவர் அஸ்தானா.

அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான மோடிக்கு மிகவும் நெருக்கமானவர். அதனால் தான், சி.பி.ஐ.,யில் உயர் பதவிக்கு அஸ்தானா வந்தார். தற்போது லஞ்சப் புகாரில் சிக்கியுள்ளார்.

பிரதமரின் கீழ்தான், சி.பி.ஐ., என்பது அரசியல் பழிவாங்கும் ஆயுதமாக மாறியது. தற்போது, அந்த அமைப்புக்குள்ளேயே அதிகார மோதல் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!