சிப் இல்லாத டெபிட், கிரெடிட் கார்டுகள் வாங்காதவர்கள் கவலை

புதுடில்லி:
சிப் இல்லாத டெபிட், கிரெடிட் கார்டுகள் இயக்கம் நிறுத்தப்படும் என்பதால் இதுவரை புதிய ஏடிஎம் வாங்காத வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு முதல் ‘இவிஎம் சிப்’ பொருத்தப்பட்ட ‘டெபிட்’, ‘கிரெடிட் கார்டு’களைப் பயன்படுத்துவது கட்டாயமாகும். பழைய முறையிலான ‘மேக்னடிக் டெபிட்’, ‘கிரெடிட் கார்டு’களை மாற்றுவதற்கு ரிசர்வ் வங்கி அளித்த காலக்கெடு கடந்த டிச. 31-ம் தேதியோடு முடிந்து விட்டது.

எனவே ‘சிப்’ இல்லாத ‘டெபிட்’, ‘கிரெடிட் கார்டு’ வைத்திருப்பவர்களுக்கு அந்த கார்டு இயக்கத்தை அந்தந்த வங்கிகள் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியானது. பழைய கார்டுகளை எளிதாக பிரதி எடுத்து மோசடி செயல்களுக்கு பயன்படுத்த முடியும் என்பதால் இந்த நடவடிக்கை. அதேசமயம், ஆன்-லைன் கணக்கு செயல்பாட்டில் இருக்கும்.

பழைய கார்டில் பணம் எடுக்க முடியாது. பொருட்கள், சேவைகள் பெற்று பணம் செலுத்த இயலாது. அதேசமயம் இந்த கார்டுகளில் சிப் வைக்கப்பட்டு இருந்தால், அதை மாற்றத் தேவையில்லை. அவ்வாறு இல்லாத கார்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டும் வங்கியை அணுகி கார்டை மாற்றிக் கொள்ளலாம்.

இதற்குக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. இந்த புதிய ‘இவிஎம் சிப்’ வைத்த ‘டெபிட், கிரெடிட் கார்டு’கள் பழைய கார்டுகளைக் காட்டிலும் அதிகமான பாதுகாப்பானவே. கார்டுகளை ‘ஸ்வைப்’ செய்யும் போது கூடுதலாகப் பின் நம்பர் கேட்கும் என்பாதல், இதில் ஏமாற்று வேலைகள் செய்ய இயலாது. இதுவரை சிப் வைத்த ஏடிஎம் கார்டுகளை வாங்காதவர்கள் கவலையடைந்துள்ளனர். இதனால் இன்று வங்கிகளில் அதிகளவு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!