சிரியாவின் ஈராக் எல்லைப்பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள்

சிரியாவில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் உள்நாட்டு போராளிகளுக்கு ஆதரவாக ஐஎஸ் தீவிரவாதிகள் செயற்பட்டு வருவதனால் அமெரிக்கக்கூட்டு படைகளும் ஈராக்கில் தாக்குதல்கள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில், ஈராக் சிரியா எல்லைப்பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள் மேற்கொண்ட தாக்குதலில் 28 பொதுமக்கள் உட்பட 54 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியா போர் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. எனினும் இந்த தாக்குதல் குறித்து இதுவரை அமெரிக்க கூட்டுப்படை தரப்பில் இருந்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!