சிரியாவின் தென் மேற்கு பகுதியில் கடுமையான வான்வழித் தாக்குதல்
சிரியாவின் தென் மேற்கு பகுதியில் கடுமையான வான்வழித் தாக்குதல் முற்கொள்ளப்பட்டுள்ளதாக போர் கண்காணிப்பு குழு ஒன்று தெரிவித்துள்ளது.
சிரியாவின் தென்மேற்கு பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலுள்ள டாரா பகுதியில் சிரிய அரசுப் படைகள், மற்றும் ரஸ்யப் படைகள் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியதில் பல பொதுமக்களும் குடியிருப்புகளும் பாதிக்கப்பட்டதாக சிரிய கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் இதுவரை சுமார் 600 வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை கடந்த ஜூன் மாதம் 19 ஆம் திகதியிலிருந்து டாரா பகுதியில் தாக்குதல் நடந்ததாகவும் சுமார் 3, 33,000 மக்கள் அப்பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டதாககவும் சிரிய அரசுப் படைகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S