சிரியாவிற்கு புதிய ஏவுகணைகளை ரஷ்யா வழங்குகிறது

சிரிய படையினரால் ரஷ்ய விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டு ஒரு வார காலத்தில், சிரியாவிற்கு புதிய ஏவுகணைகளை ரஷ்யா வழங்குகிறது.

இதனடிப்படையில், எதிர்வரும் 2 வார காலத்திற்குள் s-300 ரக ஏவுகணைப் பாதுகாப்பு செயன்முறை வழங்கப்படவுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் அரச படைகளுக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது.

இந்நிலையில், உயர்தொழில்நுட்ப வான் பாதுகாப்பு ஏவுகணைகளான எஸ்-300 ரக ஏவுகணைகளை சிரியாவுக்கு அனுப்பவுள்ளதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் சேர்கெய் ஷொய்கு தெரிவித்துள்ளார்.

Sharing is caring!