சிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைப்பது தொடர்பில் விமர்சனம்

சிரியாவிலிருந்து அமெரிக்க படையினரை மீள அழைப்பது தொடர்பிலான ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினருக்கு எதிரான போர் முடிவடைந்து விட்டதாகவும் ஐ.எஸ். அமைப்பினரை இல்லாதொழித்து விட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்திருந்தார்.

ஆனால், அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தின் ஊடாக சிரியாவில் மீண்டும் ஐ.எஸ். அமைப்பினரின் ஆதிக்கம் மேலோங்கும் அபாயம் காணப்படுவதாக ரஷ்யா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Sharing is caring!