சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல்… பெரியகுளம் 8வது இடம்பிடிப்பு

சென்னை:
நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் 8வது இடத்தை தமிழகத்தின் பெரிய குளம் காவல் நிலையம் பிடித்துள்ளது.

குஜராத்தில், கடந்த, 2015ல், டி.ஜி.பி.,க்கள் மாநாடு நடந்தது. இதில் பேசிய பிரதமர் மோடி, ‘நாட்டில் உள்ள சிறந்த, 10 காவல் நிலையங்களை தேர்வு செய்து, விருது வழங்கலாம்’ என்றார்.

இதையடுத்து, குற்றங்களை கண்டறிதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு போன்ற விஷயங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதேபோல, பொது மக்களை வரவேற்கும் முறை, காவல் நிலையத்தை சுத்தமாக வைத்திருக்க, எடுத்த முயற்சிகள் குறித்தும் பரிசீலிக்கப்பட்டன.

இதன்படி இந்த ஆண்டு நாட்டிலேயே சிறந்த, ‘டாப் – 10’ காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ராஜஸ்தான் மாநிலம், காலு காவல் நிலையம், முதல் இடம் பிடித்துள்ளது. எட்டாவது இடத்தை, பெரியகுளம் காவல் நிலையம் பிடித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!