சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து மேல் முறையீடு… தமிழக அரசின் செயலுக்கு கண்டனம்

சென்னை:
நல்லது நடக்குதா… அப்போ போடு முட்டுக்கட்டையை என்பது போல் உள்ளது தமிழக அரசின் செயல்பாடு என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். எதற்கு தெரியுங்களா?

சிலை கடத்தல் வழக்கு விசாரணை சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

சிலை கடத்தல் வழக்குகளை ஐகோர்ட் உத்தரவுப்படி ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கடந்த ஆக.,1 சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட், சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது. மேலும் ஓய்வு பெற இருந்த பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து அவரது பணியை ஒராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கில் சிறப்பு அதிகாரியாக பொன்.மாணிக்கவேல் நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!