சிறிய பயணிகள் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது… 4 பேர் பலி

வாஷிங்டன்:
சிறிய பயணிகள் விமானம் தரையில் விழுந்து விபத்துள்ளானது. இதில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் சிறிய பயணிகள் விமானம் தரையில் விழுந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் பலியாயினர்.
அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில், 20 ஆயிரம் அடி உயரத்தில் டேனலி தேசிய பூங்கா உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர்.

போலந்து நாட்டை சேர்ந்த 4 பேர் மற்றும் விமானி உள்பட 5 பேர், சிறிய ரக விமானத்தில் டேனலி தேசிய பூங்காவிற்கு பயணம் செய்தனர். கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்தது. அப்போது பனிப்பொழிவு மற்றும் மோசமான வானிலை காரணமாக திடீரென விபத்துக்குள்ளானது. இதில், 4 சுற்றுலா பயணிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!