சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்

தென் சூடானின் தலைநகர் ஜுபாவிலிருந்து யிரோல் நகர் நோக்கி பயணித்த சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விமானம் விபத்துக்குள்ளாகும் போது 22 பேர் அந்த விமானத்தில் இருந்துள்ளனர். உயிரிழந்தவர்களுள் எத்தியோப்பியா மற்றும் உகண்டா இனத்தவர்களே அதிகம் என தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்தில் 2 பேர் காணாமல் போயுள்ளனர்.

விமானம் ஆறொன்றில் வீழ்ந்தே விபத்துக்குள்ளாகியுள்ளதனால் சடலங்கள் கங்கையிலிருந்து மீட்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை அறியப்படாதுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Sharing is caring!