சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேர் கொண்ட குழுவுக்கு 221 ஆண்டுகள் சிறைத்தண்டனை

இங்கிலாந்தில் ஹடர்ஸ்பீல்ட் நகரில் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 20 பேர் கொண்ட குழுவுக்கு 221 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹடர்ஸ்பீல்ட் நகரில் 2004 முதல் 2011 ஆகிய ஆண்டுகளில் (7 ஆண்டுகள்) 20 பேர் கொண்ட குழு ஒன்று அப்பகுதியில் உள்ள சிறுமிகளை மது குடிக்க வைத்து பாலியல் துன்புறுத்தல் மற்றும் பலாத்காரத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இது தொடர்பாக 20 பேர் கொண்ட குழுவை இங்கிலாந்து பொலிஸார் கைது செய்தனர்.

அவர்களின் மீது 120 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக நடந்த விசாரணையில் குற்றவாளிகளின் தண்டனை நிரூப்பிக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனித்தனியான தண்டனை விபரம் வெளியிடப்படவில்லை. எனினும், கும்பலில் உள்ள அனைவருக்கும் மொத்தமாக 221 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

தண்டனை விதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆசியவாவை பூர்வீகமாகக் கொண்ட இங்கிலாந்து குடிமக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு பாதிக்கப்பட்ட சிறுமிகளின் குடும்பத்தார் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!