சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞருக்கு தூக்கு தண்டனை

6வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியது. அதைத் தொடர்ந்து, இறந்த சிறுமியின் தந்தை முன்னிலையில் அந்த காமுகனுக்கு இன்று காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
பாகிஸ்தான் லாகூர் மாவட்டத்த சேர்ந்த இளைஞரான இம்ரான் அலி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டன. ஏற்கனவே 9 சிறுமிகளை அவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இவர்களில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தபோது, அந்த சிறுமி இறந்துவிட அந்த சிறுமியின் உடலை குப்பைத்தொட்டியில் வீசிவிட்டு தலைமறைவானானர்.

இதுகுறித்து விசாரித்து வந்த காவல்துறையினர், அவனை கைது செய்து பயங்கரவாத தடுப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவனுக்கு தூண்கு தண்டனையும், 3 ஆயுள் தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியது.

இம்ரான் அலியால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி
அதையடுத்து, லாகூரில் உள்ள காட் லாக்பாட் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இம்ரான் அலி இன்று காலையில் தூக்கிலிடப்பட்டான். அவனால் பாதிக்கப்பட்டு இறந்த 6 வயது தந்தை மற்றும் மாவட்ட நீதிபதி முன்னிலையில் அவனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Sharing is caring!