சிறுமி பலாத்காரம் : கடும் தண்டனை வழங்க வேண்டும் – கமல்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன். அவர் பேசுகையில், மாற்றுத்திறனாளி சிறுமியை பலாத்காரம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். இவர்களிடம் மனிதாபிமானம் பார்க்க தேவையில்லை. இவர்களுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை வழங்க வேண்டும். நீதி விரைவாக செயல்பட வேண்டும், நின்று கொல்வதெல்லாம் நீதிக்கு ஆகாது. தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திவிட்ட ஒரு விஷயம் இது.

தமிழகத்தில் இதுவரை நடத்தப்பட்ட ரெய்டுகளில் சிக்கிய ரொக்கங்களும், தங்க நகை மற்றும் கட்டிகளும் என்னவாகின என்றார். 8 வழிச்சாலை திட்டத்தில் மக்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும் என்றார்.

Sharing is caring!