சிறுவன் கண்ணில் ஓட்டை போட்ட லேசர் ஒளி

கிரீஸ் நாட்டில் லேசர் ஒளியால் 9 வயது சிறுவனின் இடது கண்ணில் நிரந்தர காயம் ஏற்பட்டுள்ளதுநவீன காலத்தில் சிறுவர்களின் விளையாட்டு உபகரணங்களும் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பள்ளி சிறுவர்கள் கைகளில் எளிதில் புழங்க கூடிய லேசர் ஒளி பிம்பத்தால் ஒரு சிறுவனில் கண்ணின் ஓட்டை விழுந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து நியூ இங்கிலாந்து மருத்துவ இதழலில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், கிரீஸ் நாட்டை சேர்ந்த 9 வயது சிறுவன் தொடர்ந்து லேசர் ஒளியை தொடர்ந்து பார்த்து வந்துள்ளான். அதன் பச்சை நிற பிம்பம் அச்சிறுவனின் இடது கண் கரு விழியில் ஓட்டையை ஏற்படுத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விழத்திரையில் உள்ள சிறிய பகுதி மட்டுமே அவனது பார்வைக்கு உதவி செய்து வருகிறது.தொடர்ந்து கண்ணில் நடத்தப்பட்டட ஆய்வில் அந்த ஓட்டையின் அருகே மேலும் 2 இடங்களில் காயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கரு விழியில் ஏற்படும் ஓட்டையை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும். ஆனால் இதன் மூலம் கண் புரைக்கான அபாயம் உருவாக்கிவிடும். பொதுவாக கண் புரை என்பது கண்களை மறைத்து பார்வையை மங்களாக்கிவிடும்.

ஆனால், இந்த விஷயத்தில் கரு விழி ஓட்டை லேசர் ஒளி வெப்பத்தால் ஏற்பட்டுள்ளது. இந்த ஒளியை ஈர்த்த கண்களின் நரம்பு முற்றிலும் பாதித்துள்ளது. அச்சிறுவனின் இடது கண் பார்வை திறன் 20/20 என்ற அளவிலும், வலது கண் 20/100 என்ற அளவிலும் உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது

இது குறித்து மருத்துவர் அண்ட்ரவுதி கூறுகையில், குழந்தைகளுக்கு பொதுவாக கண்களின் காயம் அல்லது அதற்கான அறிகுறிகள் ஏற்படுவது வழக்கம். ஆனால் இந்த சிறுவன் சிகிச்சைக்கு வருவதற்கு முன்பு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு முன்பு பாதித்திருக்க வேண்டும்.

சிறுவனை முன்கூட்டியே அழைத்து வந்திருந்தாலும் எந்த பலனும் ஏற்பட்டிருக்காது. இது போன்ற பாதிப்புக்கு சிகிச்சை எதுவும் இல்லை. 18 மாதங்கள் கழித்து சிறுவன் வந்தபோதும் அவனது பார்வையில் எவ்வித மாற்றும் ஏற்படவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

Sharing is caring!