சிறு குழந்தை ஒன்றுக்கு மதுபானம் அருந்தக்கொடுத்த சம்பவம்

சிறு குழந்தை ஒன்றுக்கு மதுபானம் அருந்தக்கொடுத்த சம்பவம் தொடர்பில் குழந்தையின் தந்தை உள்ளிட்ட நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குழந்தை ஒன்றுக்கு மதுபானம் அருந்தக்கொடுக்கும் காணொளியொன்று, சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் தொடர்பான விசாரணைகளை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

குழந்தையின் தந்தையே, இவ்வாறு மதுபானம் வழங்குவதாக, காணொளி மூலம் ஊகிக்கக் கூடியதாக இருப்பதுடன், இதனை, பிரிதொரு நபர் காணொளியாகப் பதிவுசெய்து, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார்.

இந்த விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!