சிறையில் இருந்து தப்பியவரை தேடும் 2,900 காவல்துறையினர்

ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட Redoine Faïd எனும் படு ஆபத்தான கொள்ளையன் Réau (Seine-et-Marne) சிறைச்சாலையில் இருந்து அதிரடியாக தப்பித்திருந்தான். இந்நிலையில், கொள்ளையனை தேடும் வேட்டையில் 2,900 காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

உலங்குவானூர்தி மூலம் அதிரடியாக சிறைச்சாலைக்குள் இறங்கிய ஆயுதராரிகள் சிலர், சிறைச்சாலை அதிகாரிகளை பிணையக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு, Redoine Faïdஐ மீட்டனர். கொள்ளையர்கள் வந்த உலங்குவானூர்தி சில மணிநேரம் கழித்து எரிந்த நிலையில், சாள்-து-கோல் விமான நிலையத்துக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலங்குவானூர்தியில் இருந்து வெள்ளை நிற வாகனம் ஒன்றில் ஏறி தப்பியுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!