சிறையில் வசதியில்லை – மகன் புகார்

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், படுத்து தூங்க மெத்தை வழங்கப்படவில்லை என அவரது மகன் புகார் கூறியுள்ளார்.
கைது

‘பனாமா பேப்பர்ஸ்’ ஊழல் விவகாரம் தொடர்பாக, நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக, மூன்று ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.இவற்றில் ஒன்றான, பிரிட்டன் தலைநகர் லண்டனில், அவன்பீல்டு பகுதி யில், நான்கு சொகுசு வீடுகளை வாங்கியது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த, பாக்., நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.அதில், நவாசுக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது; அவரது மகள் மரியமுக்கு, ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து நவாஸ் கைது செய்யப்பட்டு, ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
முன்னுதாரணம் இல்லை

இந்நிலையில் நவாசின் மகன் ஹூசைன் கூறுகையில், சிறையில் எனது தந்தை தூங்க மெத்தை வழங்கப்படவில்லை. கழிப்பறைகள் அசுத்தமாக உள்ளதாக என்னிடம் தகவல் கூறியுள்ளனர். மக்கள் பிரதிநிதிகளை மரியாதையுடன் நடத்தியதற்கு இங்கு முன்னுதாரணம் இல்லை. ஆனால், அடிப்படை வசதிகளை பறிப்பது தொந்தரவுக்கு சமம். இவ்வாறு அவர் கூறினார்.

சிறையில் உள்ள நவாசை அவரது ஆலோசகர்கள் நேரில் சந்தித்த பேச அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்களும், நவாசுக்கு ஏசி மற்றும் மெத்தை வசதிகள் வழங்கப்படவில்லை எனக்கூறியுள்ளனர்.

Sharing is caring!