சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை நியமனம் செய்து கோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை:
சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை நியமித்து அவரது பணியை ஓராண்டுக்கு நீட்டித்து அதிரடித்துள்ளது கோர்ட். இதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ததுடன் ஓய்வு பெற இருந்த பொன்.மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து அவரது பணியை ஓராண்டுக்கு ஐகோர்ட் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் வழக்குகளை ஐகோர்ட் உத்தரவுப்படி ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகள் விசாரித்து வருகிறன்றனர். கடந்த ஆக.,1 சி.பி.ஐ.,க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த கோர்ட், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய கோர்ட், சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்றிய தமிழக அரசின் உத்தரவு தவறானதாகும்.

இதில் எந்த உள்நோக்கமும் காரணமும் இல்லை என்பது ஏற்க முடியாது. அந்த உத்தரவு செல்லாது. சிபிஐக்கு மாற்றியது எந்தவிதமான நியாயமும் இல்லை என்பதால், தமிழக அரசின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

பொன்.மாணிக்கவல் மேலும் ஓராண்டு காலம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக நீடிப்பார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தலைவராக செயல்பட்டு, தற்போது என்ன பணிகளை செய்கிறாரோ அதனை செய்வார். அதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும். சிலை கடத்தல் வழக்குக்கு சிபிஐ ஒத்துழைக்க வேண்டும் இவ்வாறு தீர்ப்பு வழங்கியது.

இது தொடர்பாக பொன்.மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறுகையில்,
இதுவரை இரவு, பகலாக வேலை பார்த்தோம். எங்களால், யாருக்கும் சிறுமை வராது. முன்பை போன்றே கடுமையாக உழைப்போம். தொழில் ரீதியாக கூடுதல் பொறுப்பு கொடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

ரயில்வே ஐஜியாக இருந்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தனி சம்பளம் வாங்கவில்லை. மக்களுக்கு சேவையாற்றும் கடமை கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் போதுமான போலீசார் உள்ளனர். அவர்களை பணியிடமாற்றம் செய்ய விடமாட்டேன்.

ஆஸி.,யில் 7 சிலைகள் வர வேண்டும். ஐகோர்ட் இல்லாவிட்டால், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு இல்லை. முதல் தகவல் அறிக்கை இல்லாத வழக்குகளையும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!