சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமனம்

சென்னை:
நியமனம்… நியமனம்… அபய் குமார் சிங் ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். சிலை கடத்தல் குறித்த வழக்குகளை விசாரித்து வரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி., பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றார்.

இதையடுத்து, இந்த பதவி ஏடிஜிபி அந்தஸ்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியாக அபய்குமார் சிங்கை நியமித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது அவர் தமிழ்நாடு காகித நிறுவனத்தின் ஊழல் கண்காணிப்பு அதிகாரியாக உள்ளார்.

இதனிடையே, பணி ஓய்வு பெறும் பொன்.மாணிக்கவேல் கூறுகையில், போலீசில் உயர் அதிகாரிகளுடன் பிரச்னை இருந்தது. தமிழக அரசால் பிரச்னை இல்லை. போலீசாருக்கு உண்மையிலேயே பணிச்சுமை உள்ளது.

முழுமனதுடன் ஓய்வு பெறுகிறேன். தங்களுக்கும் குடும்பம் உள்ளது என்பதை இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், போலீசார் உணர வேண்டும். அதிகாரிகளின் வழிகாட்டுதலை கேட்க வேண்டும். சட்டப்படி நடக்க வேண்டும். நீதிமன்றத்தையும், வக்கீல்களையும் போலீசார் மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!