சிலை வழக்கில் கைதான ஸ்தபதி உட்பட 3 பேருக்கு ஜாமீன்

சென்னை:
சிலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்தபதி உட்பட 3 பேர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

கபாலீஸ்வரர் கோயில் சிலை வழக்கில் ஸ்தபதி முத்தையா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதே வழக்கில் அறநிலையத்துறை ஆணையர் திருமகள் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மூன்றுபேருக்கு ஜாமீன் அளித்தனர். கும்பகோணம் கோர்ட்டில் ஆஜராகவேண்டும். சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் மேல் முறையீடு செய்யலாம் என உத்தரவிட்டுள்ளனர்.

திருமகள் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!