சிவக்குமார் செல்பி விவகாரம்… வாலிபருக்கு புதிய போன் வாங்கி தருவதாக தகவல்

சென்னை:
செல்பி எடுக்க முயன்ற வாலிபர் செல்போனை தட்டி விட்ட விவகாரத்தில் புதிய போன் வாங்கி தருவதாக சொல்லியுள்ளாராம் சிவக்குமார்.

நடிகர் சிவகுமார் சமீபத்தில் ஒரு விழாவுக்கு சென்றபோது, வாலிபர் ஒருவர் செல்பி எடுத்ததால் எரிச்சலாகி அந்த மொபைல் போனை தட்டி விட்டார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பலரும் சிவகுமாரை விமர்சித்தனர். அவர் விளக்கம் கொடுத்த பிறகும் தொடர்ந்து அவரை பற்றிய மீம்கள் வந்துகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தற்போது சிவக்குமார் அந்த வாலிபருக்கு நடிகர் சிவக்குமார் புதிய செல்போன் வாங்கி தருவதாக தெரிவித்துள்ளாராம். புதிய செல்போன் கிடைத்தால் மகிழ்ச்சி தான் என்று அந்த வாலிபர் கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!