சிவப்பு பண்டா …குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது

சிங்கப்பூரில் உள்ள ரிவர் சஃபாரி பூங்காவில் புதிய சிவப்பு நிற பாண்டா ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த பாண்டாவை காண குழந்தைகள் கூட்டம் களைக்கட்டுகிறது.

ரிவர் சஃபாரியில் ஏற்கனவே கார்மா, புஸ்கர் என்ற இரண்டு ஆண் இன சிவப்புப் பாண்டாக்கள் உள்ளன. அவற்றிற்கு ஜோடியாக தற்போது கேட்டா என பெயரிடப்பட்ட சிவப்பு நிற பெண் பாண்டா மெல்போர்ன் விலங்கு காட்சி சாலையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. ஆசியாவில் அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்று சிவப்பு பாண்டா. அந்தவகையில் அரிதாகிவரும் உயிரினத்தை பெருக்கும்பொருட்டு இந்த பெண் சிவப்பு பாண்டா கொண்டிவரப்பட்டுள்ளது. மற்ற பாண்டாக்களுடன் கேட்டா  காட்சிக்கு வைக்கப்படும். புதிதாக வந்துள்ள கேட்டாவை காண பூங்காவிற்குவரும் குழந்தைகள் பட்டாளம் அதிகரித்துள்ளது.

Sharing is caring!