சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் காங்., மாஜி எம்பி சிறையில் அடைப்பு

புதுடில்லி:
சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காங்., முன்னாள் எம்.பி. சஜ்ஜன் சிறையில் அடைக்கப்பட்டார்.

கலவரத்தில் சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜ்ஜன்குமார் டில்லி சிறையில் அடைக்கப்பட்டார்.
1984 ல் இந்திரா கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து டில்லி உட்பட பல நகரங்களில் கலவரம் மூண்டது.

இதில் டில்லியில் சீக்கியர்கள் பலர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணை முடிந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி., சஜன்குமாருக்கு டில்லி கோர்ட் சஜ்ஜன்குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து அவர்  டில்லி கர்கர்தூமா கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் டில்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!