சீக்கிய கலவரத்தை விசாரிக்க புதிய குழு அமைக்க ஒப்புதல்

புதுடில்லி:
சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பாக விசாரிக்க புதிய சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த, 1984ல் பிரதமராக இருந்த, அப்போதைய காங்., தலைவர் இந்திரா, சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதையடுத்து, சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் ஏற்பட்டது.
டில்லியில் மட்டும், 2,733 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, 186 வழக்குகளை பதிவு செய்தது. ஆனால், முழுமையாக விசாரணை நடத்தாமல், அவற்றை முடிப்பதாக அறிவித்தது. அதையடுத்து, ‘புதிய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அதன்படி, டில்லி உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி, எஸ்.என். திங்க்ரா, ஹிமாசலப் பிரதேச, ஐ.பி.எஸ்., அதிகாரி, அபிஷேக் துலார் மற்றும் ஓய்வு பெற்ற, போலீஸ் ஐ.ஜி., ராஜ்தீப் சிங் ஆகியோர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இவர்களில், ராஜ்தீப் சிங் இந்தப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார்.

அதையடுத்து, இரண்டு பேர் அடங்கிய விசாரணை குழுவை அமைக்க, மத்திய அரசு அனுமதி கோரியது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இரண்டு பேர் அடங்கிய, சிறப்பு விசாரணைக் குழுவுக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று ஒப்புதல் அளித்தது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!