சீனத் தலைநகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆரம்பம்

சீனத் தலைநகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் வௌிநாட்டு கற்கைகளில் தமிழ் மொழித்துறையும் உள்வாங்கப்பட்டு கற்பிக்கப்பட்டு வருகின்றது.

நான்காண்டு பட்டப்படிப்பில் 10 சீன மாணவர்கள் இணைந்துகொண்டு மிகவும் ஆர்வத்துடன் தமிழைக் கற்றுவருவதாக குறித்த பல்கலைக்கழக நிர்வாகம் செய்தி வௌியிட்டுள்ளது.

தமிழ் இலக்கியம் கற்பிக்கப்படுவதுடன், சீன மாணவர்களுக்கு முதல்நாள் வகுப்பில் தமிழ் எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், திருக்குறளும் கற்பிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்வரி என்ற பெயர் கொண்ட சீன பேராசிரியையால் இங்கு கற்கைநெறிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Sharing is caring!