சீனாவில் 14000 பன்றிகள் கொலை….தொற்றுநோயே காரணம்

ரஷ்யாவைத் தொடர்ந்து சீனாவில் உள்ள பன்றிகளுக்கு ஸ்வைன் ஃப்ளு காய்ச்சல் பரவுவதை அடுத்து அங்கு 14 ஆயிரத்து 500 பன்றிகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன.

பன்றி போன்ற விலங்குகளுக்கு ‘ஆப்ரிக்கன் சுவைன் காய்ச்சல்’ அபாயம் ஏற்படும். இந்த நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. சமீபத்தில் ரஷ்யாவில் இந்த நோய் பன்றிகளுக்கு பரவியது. அங்கிருந்து சீனாவிலும் தற்போது இந்த நோய் தாக்குதல் பரவலாக இருக்கிறது.

முத்தம் முதலாக மே மாதம் சீனாவில் இந்த நோய் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது லையூங்கன் என்ற பகுதியில் ஏராளமான பன்றிகளுக்கு இந்த நோய் பரவியுள்ளது.

உலகளவில் பன்றி இறைச்சியில் முதல் இடம் வகிக்கும் சீனாவில் இந்த நோய் தாக்கியுள்ளது. லையூங்கன் நகரில் ஏராளமான பன்றி பண்ணைகள் உள்ளன.ஆனால் தற்போது அங்கு 40 லட்சம் பன்றிகள் அங்கு மட்டுமே வளர்க்கப்படுகின்றன. நோய் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் 14 ஆயிரத்து 500 பன்றிகள் இதுவரை கொல்லப்பட்டுள்ளன.

தொடர்ந்து மற்ற மாகாண பண்ணைகளிலும் நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. நோய்க்கு தடுப்பு மறுத்து இல்லாததால் நோய் தீவிராடைந்து பன்றிகள் இறக்கும் குழல் ஏற்படும். இறந்த பன்றிகளால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதனால் சினாவில் பன்றி இறைச்சி வர்த்தகம் மோசமான இழப்பை சந்திக்க நேரிடும்.

இந்த வகை பன்றிக் காய்ச்சல் மனிதர்களுக்கு பரவாது என்றாலும், மற்ற பிராணிகளுக்கு எளிதில் பரவும் அபாயம் உள்ளது. இதனால் சீன அரசு நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாய் செயல்பட்டு வருகிறது. நோய் கட்டுப்படுத்தப்படாமல் போனால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் நோய் பரவும் அபாயம் உள்ளது.

Sharing is caring!