சீனாவை உதாரணம் காட்டும் இம்ரான்கான்… ஆரம்பத்திலேயேவா!

கராச்சி:
இந்தப்பக்கம் இந்தியாவுடன் வர்த்தகம் வலுப்பெறும் என்று கூறிவிட்டு அடுத்த பக்கம் சீனாவுக்கு வால் பிடிக்க ஆரம்பித்து விட்டார் இம்ரான்கான்.

பாகிஸ்தானில் ஜனநாயகத்தை பலப்படுத்த பாடுபடுவேன். இந்தியாவுடனான வர்த்தக உறவு வலுப்பெறும் என்று அந்நாட்டு பிரதமராக பொறுப்பேற்கவுள்ள இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
நாட்டின் பொருளாதாரம் பாதிப்பில் உள்ளது. இதனை மீட்டெடுப்போம். கடந்த சர்வாதிகாரிகளை மன்னிப்போம். வரும் காலங்களில், இது வரை இல்லாத அளவிற்கு பாகிஸ்தான் முன்னேற போகிறது. சீனா, அமெரிக்கா உடனான நட்பு பலப்படும். சீனாவின் வளர்ச்சி நமக்கு உதாரணம். சீனாவிடம் நாம் கற்க வேண்டியுள்ளது.

இந்தியாவுடன் வர்த்தக உறவை வலுப்படுத்துவோம். காஷ்மீர் மக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். இங்கு மனித மீறல்கள் நடக்கிறது. இந்த விவகாரத்தில் பேச்சு நடத்தி நல்ல முடிவை எடுக்க வேண்டும். இந்திய மீடியாக்கள் என்னை ஒரு வில்லனாக சித்தரிக்கிறது.

இந்தியா மற்றும் ஆப்கனுடனான உறவை வலுப்பபடுத்த தயாராக இருக்கிறேன். ஊழல் இந்த நாட்டை கரையானாக, அரித்து வந்துள்ளது. ஏழை மக்களின் தேவையை நிறைவேற்ற பாடுபடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் இந்தியாவுடன் வர்த்தகம் பலப்படும் என்று கூறிவிட்டு மறுபக்கம் சீனா உதாரணம் என்று கூறியுள்ளது எதற்காக என்பதை அவர்தான் விளக்கம் வேண்டும்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!