சீனா பக்கம் இலங்கை போவதை, தடுக்க வேண்டும்

இலங்கை போன்ற நாடுகள் சீனாவின் பக்கமாக நகர்ந்து செல்ல இந்தியா விட்டுவிடக் கூடாது என இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இராணுவ தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“சீன-இந்திய எல்லைப் பகுதியில் சீனா பல அத்துமீறல்களைப் புரிந்தே வருகிறது. சீனா பலம் வாய்ந்த ஒரு நாடாக இருக்கலாம். ஆனால், இந்தியாவும் பலவீனமான நாடு அல்ல.

“பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினையில் இருந்து சீன எல்லைப் பிரச்சினை குறித்து இந்தியா தனது கவனத்தைத் திருப்ப வேண்டும். அயல் நாடுகள் சீனா நோக்கி நகர்வதை இந்தியா தடுக்க வேண்டும்.

“‘அயலவர்களுக்கு முதலிடம்’ என்ற கொள்கையை அமுல்படுத்தி இலங்கை, நேபாளம், பங்களாதேஷ், பூட்டான், மியன்மார் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைத் தன்பக்கம் வைத்துக்கொள்ள இந்தியா முயற்சிக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Sharing is caring!