சீனா பொருட்கள் மீது அமெரிக்கா புதிய வரியை விதித்துள்ளது

சீனாவின் 200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் மீது அமெரிக்கா புதிய வரியை விதித்துள்ளது.

இந்தக் கூடுதல் இறக்குமதி வரிகள் 6,000 பொருட்கள் மீதே விதிக்கப்பட்டுள்ளன.

கைப்பைகள், அரிசி, ஆடைகள் போன்றவை இந்தக் கூடுதல் வரிவிதிப்புக்குள் அடங்குகின்றன.

அமெரிக்கா இது போன்ற வரிவிதிப்பில் ஈடுபட்டால் தாமும் பதில் நடவடிக்கை எடுப்பதாக சீனா ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!