சீன இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதிப்பு

சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்திலிருந்து சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

கணினி வன்பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட ஏனைய பொருட்களை அமெரிக்காவுக்குள் கொண்டுவர அனுமதிக்க வேண்டாமென எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

ஸின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்கர் இன மக்கள் நடத்தப்படும் விதம் தொடர்பில் சீன அரசுக்கு டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தினால் விடுக்கப்படும் அழுத்தங்களின் அண்மைய நகர்வாக இந்த தடை உத்தரவு நோக்கப்படுகின்றது.

ஸின்ஜியாங் மாகாணத்தில் தயாரிக்கப்படும் பொருட்கள் சிறை வைக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவர்களின் உழைப்பால் உருவானது என்பதால் தடை செய்யப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

முறையற்ற, மனிதாபிமானமற்ற மற்றும் சுரண்டல் முறைகளை உள்ளடக்கிய உழைப்பு மூலம் உருவான பொருட்களை அமெரிக்க விநியோக சங்கிலியில் நுழைவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Sharing is caring!