சீன பொருட்களுக்கு 50 ஆயிரம் கோடி டாலர் வரை வரி விதிப்பு

சீன பொருட்களுக்கு 50 ஆயிரம் கோடி டாலர் வரை வரி விதிப்பு செய்யப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உயர்த்தினார். இறக்குமதியாகும் இரும்புக்கு 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீதமும் வரியை உயர்த்தினார்.

குறிப்பாக சீனாவில் இருந்து இறக்குமதியாகும் 5,000 கோடி டாலர் மதிப்பிலான 800 பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்தது. இதன்மூலம் சீனாவுக்கு 5,00 முதல் 6,000 பில்லியன் டாலர் நஷ்டம் ஏற்படும் என்று கணக்கிடப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரியை சீனா உயர்த்தியது.

இந்நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் வரி விதிக்க டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 50 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர்கள் வரை வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கு அரசியல் உள்நோக்கம் கிடையாது. இது நாட்டிற்கு அவசியமான ஒன்று டொனால்டு டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring!