சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க திட்டம் ஒருவர் சிக்கினார்

புதுடில்லி:
சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க திட்டம் போட்டு வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து காஷ்மீரில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருக்கின்றனர். இந்த சோதனையில் 8 வெடிகுண்டுகள் மற்றும் ரூ.60,000 பணத்துடன் காஷ்மீரில் இருந்து டில்லிக்கு சென்ற ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த பயங்கரவாதி என்பதும், அவனது பெயர் இர்பான் ஹசன்வானி என்பதும் தெரிய வந்துள்ளது. அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆகஸ்ட் 15 ம் தேதி நடக்கும் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.

ஜம்மு மற்றும் டில்லியில் தாக்குதல் நடத்த காஷ்மீரில் செயல்பட்டு வரும் லக்ஷர் இ தொய்பா, ஜெய்சி இ முகம்மது, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புக்கள் திட்டமிட்டுள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது. தாக்குதல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகவே இர்பான் டில்லி புறப்பட்டது தெரிய வந்துள்ளது.

பயங்கரவாதி கைது செய்யப்பட்டதன் மூலம் பயங்கரவாத தாக்குதல் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் பலப்பட்டுத்தப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!