சுப்ரீம் கோர்ட் அடுத்த நீதிபதி யார்? ரஞ்சன் கோகாய் பெயர் அடிபடுது!

புதுடில்லி:
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யார்? இப்போது இதுதான் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் ரஞ்சன் கோகாய் பெயர்தான் அதிகம் அடிபடுகிறது.

புதிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி யார் என்பதற்கான தேடுதல் வேட்டை துவங்கி விட்டது. அடுத்து வருபவர் யார் என்பதை தெரிவிக்கும்படி தற்போதைய தலைமை நீதிபதிக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வரும் அக்., 2ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதற்கு ஒரு மாதத்திற்கு முன், பிறகு வரப்போகும் புதிய தலைமை நீதிபதி யார் என்பதை அவர் தெரிவிக்க வேண்டும். முதல் கட்டமாக மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

இதனால் செப்., முதல் வாரத்தில் புதிய தலைமை நீதிபதி யார் என்பதை தீபக் மிஸ்ரா தெரிவித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அசாமை சேர்ந்த நீதிபதி ரஞ்சன் கோகாய் தான் அடுத்த தலைமை நீதிபதி என சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவருக்கே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!