சுற்றிப் பார்க்கணுமா… இதோ இருக்கு ஹெலிகாப்டர்

ஆமதாபாத்:
மிக உயரமான சிலையான சர்தார் படேலின் சிலையை சுற்றிப்பார்க்கணுமா… இதோ உங்களுக்காக ஹெலிகாப்டர் வசதி செய்யப்பட்டுள்ளது.

சர்தார் படேலின் சிலையை பார்க்க ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2,900 கட்டணம் (10 நிமிடம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம், நர்மதா மாவட்டத்தில் உள்ள, கெவாடியா என்ற இடத்தில் நாட்டின் முதல் துணை பிரதமர் சர்தார் படேலின் பிரமாண்ட சிலை திறக்கப்பட்டு உள்ளது. இந்த சிலைக்கு ‘ஒற்றுமையின் சிலை’ என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த சிலையை, ஹெலிகாப்டர் மூலம் சுற்றி பார்க்கும் சேவை, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 10 நிமிட சேவைக்கு 2,900 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!