சுற்றி பார்க்க வாங்க… டிக்கெட் விலையில் தள்ளுபடி வழங்க முடிவு

புதுடில்லி:
டிக்கெட் விலையில் சிறப்பு தள்ளுபடி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எதற்கு தெரியுங்களா?

பொதுத் துறையைச் சேர்ந்த, தேசிய ரயில் அருங்காட்சியகம், டில்லியில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகம் ஆகியவை, முதன்முறையாக ஒப்பந்தம் செய்துள்ளன. இதன் மூலம், இந்த இரண்டு அருங்காட்சியகங்களுக்கு வரும் பார்வையாளர்களுக்கு, டிக்கெட் விலையில், தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

இதனால், ஏராளமான பார்வையாளர்கள் அருங்காட்சியகங்களுக்கு வருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!