சுற்றுலாப் பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்திய நபர் கைது

பிரான்ஸ் நாட்டில் சுற்றுலாப் பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ்/ இங்குள்ள பாசின் டி லா விலெட்டி என்னும் பகுதி சுற்றுலாப்பயணிகளிடையே மிகவும் பிரபலமான இடம் ஆகும். எப்போதும் இங்கு பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். நேற்று இரவு சுமார் 11 மணிக்கு திடீரென ஒரு மர்ம நபர் அங்கு வந்துள்ளார்.

அவர் சுற்றுலாப் பயணிகள் இடையே புகுந்து தாம் வைத்திருந்த கத்தியால் தனக்கு எதிர்வில் வந்தவரக்ளை எல்லாம் குத்தி உள்ளார். அதனால் அந்த இடத்தில் கடுமையான பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கத்திக் குத்து சம்பவத்தில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.

சுற்றி இருந்தவர்கள் தங்களுக்கு கிடைத்த பொருளை அந்த நபர் மீது எறிந்துள்ளனர். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மர்ம நபரை கைது செய்துள்ளனர். அவர் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

காயமடைந்த 7 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Sharing is caring!