சுற்றுலா விடுதிகளை சுற்றி அமைக்கப்பட்ட மின் வேலிகள் அகற்றம்

ஊட்டி:
மசினகுடி அருகே சுற்றுலா விடுதிகளை சுற்றி அமைக்கப்பட்டு இருந்த மின் வேலிகள் அகற்றப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சுற்றுலா விடுதிபகுதியில் இருந்த மின்வேலி அகற்றப்பட்டது. மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் பகுதியில் 39 சுற்றுலா விடுதிகள் செயல்பட்டு வந்தன. இவைகளை அப்புறப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது.

இருப்பினும் சுற்றுலா விடுதிகள் இடத்தை காலி செய்வதற்கு கால அவகாசம் கோரி இருந்தன. இந்நிலையில் வனத்துறையினர் போலீசார், வருவாய்துறையினர் ஆகியோர் இணைந்து சுற்றுலா விடுதி பகுதியில் இருந்த மின்வேலியை அகற்றினர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!