சுலவேசி தீவில் பாலு என்ற கடற்கரை நகரை சுனாமி தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்

இந்தோ​னேஷியாவின் சுலவேசி தீவில் பாலு என்ற கடற்கரை நகரை சுனாமி தாக்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

7.5 ரிக்டர் அளவில் பதிவாகிய பாரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, குறித்த கரையோரப் பிரதேசத்தினை சுனாமி தாக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

6 தசம் 6 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்ததாகவும், இதனால் கட்டடங்கள், மதவழிபாட்டுத்தலங்கள் ஆகியன இடிந்து வீழ்ந்ததாகவும், அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோ​னேஷியாவின் சுலவேசி தீவில் ஏற்பட்ட 7 தசம் 5 ரிக்டர் அளவிலான பாரிய நிலநடுக்கத்தினைத் தொடர்ந்து, விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை தளர்த்தப்பட்ட சிறிது நேரத்தில் சுனாமி தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தோனேஷியாவின் லொம்பொக் தீவில் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 500 பேர் உயிரிழந்தனர்.

2004 டிசம்பர் 26 இந்தோனேஷியாவின் சுமாத்ரா கடற்பகுதியில் நிகழ்ந்த மிகப் பெரிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமியால் இந்துசமுத்திரப் பிராந்தியங்களில் 2 லட்சத்து 26 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். இவர்களில் 1 லட்சத்து 2 ஆயிரம் பேருக்கு மேல் இந்தோனேஷியாவை சேர்ந்தவர்கள்.

Sharing is caring!