சுவிஸ் வாழ் யாழ் தமிழனின் மனிதாபிமானம்
சுவிஸில் இருக்கும் யாழ்ப்பாணத்தைத் சேர்ந்த வாமதேவன் தியாகேந்திரன் என்பவர் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணியுடன் 1000 வீட்டுத்திட்டத்தை தனது சொந்த நிதியில் இருந்து முன்னெடுக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்ட செயற்பாடாக 60 பேருக்கான வீடு அமைக்கும் செயற்திட்டத்திற்காக யாழ். கோப்பாயில் காணியை வாங்கியுள்ளார்.
இதுவரை வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்கள் தன்னுடன் தொடர்பு கொண்டு வீட்டுத்திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று வாமதேவன் தியாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இவர் யாழ்ப்பாணத்தில் தியாகி அறக்கொடை நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். அந்த நிலையத்தினூடாக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 20 வருடங்களுக்கும் மேலாக உதவிகளை வழங்கி வருகின்றார்.
வடக்கில் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இவர் மாதாந்தம் பண உதவியை வழங்கி வருகின்றார்.
பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கு மாதாந்த பணக்கொடுப்பனவையும் இலவச மருத்துவ முகாமையும் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.