சுவையான உணவாக நாய் இறைச்சி

நாட்டின் மிகப்பெரிய நாய்கள் கொல்களத்தை தென்கொரியா மூடவுள்ளது.

சியோங்நம் நகரிலுள்ள குறித்த கொல்களத்தை இரண்டு தினங்களுக்குள் மூடி, அதனை பொதுப் பூங்காவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

வருடந்தோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நாய்கள் குறித்த கொல்களத்தில் இறைச்சிக்காக வெட்டப்பட்டு வந்த நிலையில், செயற்பாட்டாளர்களால் இதனை நிறுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்கொரியாவில் சுவையான உணவாக நாய் இறைச்சி உட்கொள்ளப்பட்டு வந்த நிலையில், சமீபத்திய ஆண்டுகளாக நாய் இறைச்சி மீதான நாட்டம் குறைவடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அங்குள்ள ஏனைய கொல்களங்களையும் மூடி, எதிர்காலத்தில் நாய் கொல்களங்களை இல்லாமற்செய்வதே தமது நோக்கம் என விலங்கு உரிமை சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!