சூதாட்ட சோதனை… ரூ. 25 லட்சம் சிக்கியது… 9 போலீசார் சஸ்பெண்ட்

பரூச்:
சட்ட விரோத கும்பலை கட்டுப்படுத்த தவறியதாக 9 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டம் அங்கலேஸ்வர் ரூரல் போலீஸ் ஸ்டேஷன் பகுதியை சேர்ந்த பாடி கிராமத்தில் மாநில சிறப்பு பிரிவு போலீசார் சூதாட்ட சோதனையில் ஈடுபட்டனர்.

இப்பிரிவு டி.ஜிபி., சிவானந்த் ஜா தலைமையில் சோதனை நடந்தது. இதில் 19 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்கள், செல்போன்கள், ரூ. 25.52 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து சட்டவிரோத கும்பலை கட்டுப்படுத்த தவறியதாக ஒன்பது போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!