சூறைக்காற்றின் வேகம்… மலை தோட்டப்பயிர்கள் சேதம்

கொடைக்கானல்:
சூறைக்காற்றின் வேகத்தில் மலைத் தோட்டப்பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

தாண்டிக்குடி மலைப்பகுதியில் கடந்த இருதினங்களாக வீசிய சூறைக்காற்றால் மலைத்தோட்டப் பயிர்கள் சேதமடைந்துள்ளன.

அவகடா, மலைவாழை, ஆரஞ்சு, ஸ்டார் ப்ரூட், மெகடாமியா, சவ்சவ் ஆகியன சூறைக்காற்றுக்கு தாக்குப் பிடிக்காமல் முறிந்தும், காய்கள்உதிர்ந்தும் உள்ளன. நிழல் பராமரிப்புக்கு வளர்க்கப்பட்ட மரங்கள், வாழை முறிந்து சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர் சூறைக்காற்றால் ஏராளமான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

கொடைக்கானல் துணை மின் நிலையத்தில் இருந்துதாண்டிக்குடிக்கு கீழ்மலைப்பகுதிக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக வரும் மின்பாதையில் மரங்கள் முறிந்து அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. சூறைக்காற்றுடன் அவ்வப்போது சாரல் மழையும் நீடிக்கிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!