சென்னையில் கனமழை… பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

சென்னை:
சென்னையில் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறபகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்தாலும், மாலை நேரங்களில் லேசான மழை பெய்து குளிர்வித்து வருகிறது.

இந்நிலயில் சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை, வடபழனி உட்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் இன்று அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!