சென்னை டாக்டர் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

புதுடில்லி:
சென்னையை சேர்ந்த ரூ.5 மட்டும் கட்டணம் பெற்று சிகிச்சை அளித்த டாக்டரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, வெங்கடாசலம் தெருவைச் சேர்ந்தவர், டாக்டர் ஜெயச்சந்திரன். இவர், அந்த பகுதியில் ரூ.5 கட்டணத்தில் மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். அவர் உடல்நலக்குறைவால் கடந்த 19ம் தேதி காலை காலமானார். பொது மக்கள் அஞ்சலிக்கு பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையை சேர்ந்த டாக்டர் ஜெயச்சந்திரன் ஒரு கதாநாயகன். தனது வாழ்நாள் முழுவதும் மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக வாழ்ந்தவர் எனக்கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!