செம… செம உற்பத்தி… காற்றாலை மின் உற்பத்தி அதிகம்

கோவை:
செம… செம… மின் உற்பத்தியில் காற்றாலை முன்னிலை வகித்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

தேசிய அளவில், காற்றாலை மின் உற்பத்தியில், தமிழகம், தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, பல்லடம், உடுமலை, தேனி ஆகிய இடங்களில், 8,152 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 11 ஆயிரத்து, 800 காற்றாலைகள் இயங்கி வருகின்றன.

கடந்த மூன்று நாட்களில், காற்றாலை மின் உற்பத்தி, 30 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக, அகில இந்திய காற்றாலை மின் உற்பத்தி சங்கத் தலைவர் கஸ்துாரி ரங்கையன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:

காற்றாலை மின் உற்பத்தி, இந்தாண்டு மே இறுதியில் துவங்கியது. செப்., இறுதி அல்லது அக்., முதல் வாரம் வரை நீடிக்க வாய்ப்புள்ளது. கடந்த ஒரு வாரமாக, காற்றின் வேகம் அதிகரித்து வந்தது.

கடந்த 2ம் தேதி, 8.66 கோடி; 3ம் தேதி, 8.71 கோடி; 4ம் தேதி, 8.9 கோடி யூனிட் மின்சாரம், உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மொத்த மின் உற்பத்தியில், 30 சதவீதம் காற்றாலை மூலம் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!